புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய ஸ்தாபனங்கள் உட்பட 42 அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் உள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் 57 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் அடங்கிய வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.