நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அத்தனகலு, கிங், களனி, நில்வளா, களு ஆகிய கங்கைகளின் அருகில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.