முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (புதன்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ அமைதிப் போராட்டங்களின் மீது கடந்த 09ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்பின்னர், விசாரணைகளுக்காக மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.