க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அநுராதபுரம் ஹிடோகம பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடந்த 25ஆம் திகதி பரீட்சைக்குத் தோற்றிய மாணவியொருவர் பரீட்சை பார்வையாளரால் துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவி தனது தாயுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
இதன்படி கண்காணிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.