பொரளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, குறித்த வைத்தியசாலையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவிய நிலையிலேயே தற்போது இந்த நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
அந்தவைகயில், வைத்தியசாலையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கும் தினசரி உணவில் இறைச்சி, மீன், முட்டை, பருப்பு உள்ளிட்ட புரதச்சத்துமிக்க உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு தினமும் முட்டைகள் கொடுக்க வேண்டும் என்ற போதிலும், தற்போது குறித்த சத்துமிக்க உணவு வகைகளை கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது சிறுவர்களுக்கு ஒரு கொடையாளரிடமிருந்து குறைந்த எண்ணிக்கையிலான முட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை முடிந்த பின்னர் அந்த குழந்தைகளுக்கு முட்டைகளை வழங்க முடியாத நிலைமை மீண்டும் ஏற்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.