இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார சங்ககார, வாகன அனுமதி பத்திரம் புதிப்பிப்பதற்காக சென்று வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணத்தினால் தற்போது பொருட்களை கொள்வனவு செய்யவும் தேவைகளை நிறைவேற்றவும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார சங்ககார வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
இவர், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.