ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ஏற்று நாட்டை ஆட்சி செய்ய விரும்பவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்த பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்தால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், நாட்டின் நிலைமை மோசமடைந்து வருவதாவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தொடர்ந்தும் அவதிப்படுவதாகவும் வரிசையில் நிக்கும் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.