தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புக்களை முன்வைக்கவுள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் அறிக்கை செய்த பின்னர் விமானத்தை விடுவிக்க எதிர்பார்ப்பதாக ரஷ்ய விமான நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த மூன்று நாட்களாக விமானம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்விமான பணியாளர்களும் ரஷ்ய பிரஜைகளும் நேற்று ரஷ்யா திரும்பினர்.
இதேவேளை நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட முடியாது என ரஷ்ய தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், தூதுவருக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இது குறித்து விளக்கமளித்ததாகவும் கூறினார்.