பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விவாதம் நாளைய தினம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
பின்னர் அவரது அறிவிப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்றெவுள்ளது