நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டிற்கு தினசரி வருமானம் 4 பில்லியன், தினசரி செலவு 9.6 பில்லியன் ஆகும். எனவே, தினமும் 2.4 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை சுமக்க வேண்டிய பெரும் நிதி நெருக்கடியில் இந்த சிறிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்றும் அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் சமர்ப்பித்தார்.
நாட்டுக்காகப் பலரும் செய்த நன்கொடைகளைப் பெறாமல் ஒரு வருடத்திற்கு சம்பளமின்றி பணியாற்ற அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.