உலக சந்தையின் சாதாரண விலையை விட 35வீதம் குறைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் எரிபொருளை கொள்வனவு செய்வதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தயார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எரிசக்தி அமைச்சிடம் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், அந்த கோரிக்கைக்கு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணுவதற்காக ரஷ்யா வழங்கிய நீண்ட கால கடன் வசதியை நாங்கள் புறக்கணித்துவிட்டோம் என்றும் அவர் கவலை வெளியிட்டார்.