அரசியல் பேதங்களை ஓரிருமாதத்திற்கு ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது நாட்டின் தேவையை கட்சித் தலைவர்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், நாடாளுமன்றத்தில் உள்ள இளம் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதற்கான அர்த்தம் அமைச்சுப் பதவிகளை ஏற்பது அல்ல என்றும் மாறாக நாட்டை கட்டியெழுப்பி எதிர்கால நடவடிக்கைக்கு ஒரு நாடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஆகவே தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க அனைத்துக் கட்சிகளும் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும் அதுவே நெருக்கடியை தீர்க்க வழியமைக்கும் என்றும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.