கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு களைந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.