புத்தளம்–கொழும்பு பிரதான வீதியில், பட்டுலுஓயா பகுதியில் கார் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரும் காரில் பயணித்தவர்கள் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













