தெற்கு கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் சனிக்கிழமை (28) அதிகாலை வேளையில், மேன்ஹாட்டன் கடற்கரைக்கு அருகில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் கடைகளிலிருந்து அவசரமாக வெளியேறினர்; லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் (LAX) முனையம் ஒன்றில் மேற்கூரையில் இருந்த ஓடுகள் கீழே விழுந்தன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின் அதிர்வுகள் ஏற்பட்டன.
இருப்பினும், காயங்கள் அல்லது பெரிய அளவிலான கட்டமைப்புச் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில், மேன்ஹாட்டன் கடற்கரைக்கு மேற்கே-தென்மேற்கே சுமார் 3.7 மைல் தொலைவில், சுமார் 7.6 மைல் ஆழத்தில் ஏற்பட்டது.
சாண்டா மோனிகா மற்றும் பசடேனா உள்ளிட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் பல இடங்களில் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சிஎன்என் (CNN) செய்தி வெளியிட்டுள்ளது.
















