பீகாரிலிருந்து ஜார்க்கண்டின் ரம்ஹர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ரஜ்ரப்பா சின்னமஸ்தா கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் சென்றுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதின்மூன்று பேர் இன்று (29) அதிகாலை நிகழ்ந்த வீதி விபத்தில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் நான்கு பெண்கள், ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் ஸ்கார்பியோ (Scorpio) வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இவர்கள் பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜங்காரோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்; அவர் ராம்கரில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸாரின் தகவல்படி, ஹசாரிபாக்-ராஞ்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை-33-இல், குஜ்ஜு காவல் சாவடிக்கு உட்பட்ட பாங்கி கிராமப் பகுதியில், இன்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, ஸ்கார்பியோ வாகனம் அதிவேகமாகச் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றின் பின்புறம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.















