வடகொரியா எந்த நேரத்திலும் ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
பியாங்யாங் ஞாயிற்றுக்கிழமை எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் வட கொரியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அத்தகைய அணு ஆயுதச் சோதனைக்கு “விரைவான மற்றும் வலிமையான பதில்” அளிக்கப்படும் என அமெரிக்க இராஜாங்க பிரதி செயலாளர் வெண்டி ஷெர்மன் தெரிவித்துள்ளார்.
வடகொரியா கடந்த ஐந்து ஆண்டுகளாக அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை என்றாலும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.