நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தற்போது வரிகளை குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றமை கன்சர்வேடிவ் கட்சியில் ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்பவும் வாழ்க்கைச் செலவு குறையும் என்றும் நம்புகின்றனர்.
வாக்கெடுப்பில், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 211 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்ற அதே நேரத்தில் அவரை நீக்க 148 வாக்குகள் கிடைத்தன.
அவருக்கு கிடைத்த எதிரான வாக்கு, பரவலாக எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தனது கட்சி முழுவதிலும் உள்ள எம்.பி.க்களை ஈர்க்கும் கொள்கைகளை அறிவிக்க வேண்டிய அழுத்தத்தை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எதிர்கொள்கிறார்.
எனவே அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வணிக நிறுவனங்களுக்கு சில வரிக் குறைப்புகள் அறிமுகமாகும் என எம்.பி.க்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.