உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டை வந்தடைந்த இறுதி கப்பலில் 2,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்பட்டது.
அதன்படி, மேல் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை விசேட விநியோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து எரிவாயு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை, எரிவாயு ஏற்றிவந்த கப்பலொன்று நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த போதிலும் நேற்று பிற்பகல் வரை அதனை விடுவிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
3500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பலுக்கு மேலும் 2.5 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.