பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிட்டது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக பங்குகளை வைத்திருக்கும் பல பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் குழுவில் இருந்து தனது இராஜினாமாவை சமர்ப்பித்தார்.