வான்வழி தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்கி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் குறித்த ஏவுகணையை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு தயாரித்துள்ள இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் வான் தாக்குதலை முறியடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மற்றொரு ஏவுகணை 160 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
ஒஸ்ட்ரா எம்.கே. 2 மற்றும் எம்.கே.3 ஆகிய இந்த இரண்டு ஏவுகணைகளும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சோதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.