தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் உடனான சந்திப்பின் பின்னர் பொலன்னறுவையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இடைக்கால அரசாங்கம் அமைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவைப் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார் .
இதேவேளை எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு தற்போதைய அரசாங்கம் கொண்டு வரும் அனைத்து நன்மை பயக்கும் சீர்திருத்தங்களுக்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .