அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்றைய தினம் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவை வழங்கியுள்ள அதேவேளை துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
டெக்சாஸ், உவால்டேவில் உள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
டெக்ஸாஸில் கடந்த மாதம் 24ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
அதற்கு சில தினங்களுக்கு முன்னர் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.