அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்த தீர்மானித்து 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை அவுஸ்ரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டுள்ளது.