வடக்கு புர்கினா பாசோவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார்.
அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) ஆகியவற்றுடன் தொடர்புடைய போராளிகள் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் செனோ மாகாணத்தின் குறித்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவோடு இரவாக Seytenga கிராமம் தாக்கப்பட்டதை அடுத்து, இராணுவம் இதுவரை 50 உடல்களைக் கண்டுபிடித்துள்ளது என அரசாங்கம் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள அதேவேளை நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.