மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தெரிவித்த கருத்து தொடர்பாக தான் கூறியவற்றில் இப்போதும் உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறினார்.
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹர்ஷ டி சில்வா தானும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் இலங்கைக்கு உரிய திட்டங்கள் இல்லாததால் உலக நாடுகள் உதவிக்கு வர தயங்குவதாக மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அதன்போது தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மறுத்திருந்தார்.
பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதற்கான உதவிகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதில் வழங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி, “சில வாரங்களுக்கு முன்பு அவருடனான உரையாடலைக் குறிப்பிட்டு நான் கூறியவற்றில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்.
இருப்பினும், பல நாடுகள் இலங்கைக்கு உதவ ஆர்வமாக உள்ளன என்பதை இப்போது அவர் நம்புவதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
With all due respect for my friend Pres @MohamedNasheed I stand by what I said re conversation w him a few weeks back. However I am happy to note his belief now that many nations are eager to help #SriLanka. https://t.co/rRHgSrXQjD
— Harsha de Silva (@HarshadeSilvaMP) June 14, 2022