சீனாவிடமிருந்து 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட அரிசி தொகை எதிர்வரும் 25 ஆம் திகதியும், இரண்டாம் கட்டம் 30 ஆம் திகதியும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
இந்த அரிசி தொகையில் 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உபயோகிக்கவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது காணப்படும் உரப்பிரச்சினையால் நெற் பயிர்ச்செய்கை குறைவடைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த மாதம் தமிழ் நாட்டு அரசாங்கத்திடமிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சீனாவும் அரிசியை வழங்கி இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.