நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, தேநீர் அருந்தும் அளவை குறைக்குமாறு பாகிஸ்தான் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு குறைவான தேநீரை பருகுவதன் மூலம் தேயிலையை அதிகம் இறக்குமதி செய்வதை தவிர்க்க முடியும் என மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால் கூறினார்.
நாட்டின் குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, தற்போது இரண்டு மாதங்களுக்கும் குறைவான அனைத்து இறக்குமதிகளுக்கும் போதுமானதாக உள்ளதாக கூறப்படுகின்றது.
உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதியாளராக இருக்கும் பாகிஸ்தான், தேயிலை நுகர்வை குறைக்கும் வகையில் நாட்டு மக்களிடமே இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
தேநீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.