திறந்த கணக்கு முறையின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் திறந்த கணக்கு முறையின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
திறந்த கணக்கு பரிவர்த்தனை என்பது பொருட்கள் அனுப்பப்பட்டு பணம் செலுத்தப்படுவதற்கு முன்னர் பொருட்களை விநியோகம் செய்யும் முறையாகும்.
முன்னதாக, திறந்த கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது நடைமுறையில் இருந்தது.
எனினும் மே 6 ஆம் திகதி முதல், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.