இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்குவதற்காக புதிய இரண்டு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேரக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
விமானங்களுக்கான ஜெட் எரிபொருள் விநியோகிக்க மற்றுமொரு தனியார் நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை எரிபொருள் நிறுவனங்களுக்கு 735 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீண்டும் நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் திகதி தொடர்பில் தற்போது சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேரக குறிப்பிட்டுள்ளார்.