மட்டக்களப்பில் மிக வேகமாக டெங்கு நோய் பரவி வருதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.
எனவே அதனைக் கட்டுப்படுத்தும் துரித நடவவடிக்கைகளை சுகாதார பகுதியினர் மேற்கொண்டு வருவதாக உதயகுமார் மேலும் தெரிவித்தார்.
அதன்படி இன்று சனிக்கிழமையும் பல இடங்கள் கண்டறியப்பட்டு 40 வீடுகள் மற்றும் கடைகளில் சோதனை நடவடிக்கைகள’ மேற்கொள்ளப்பட்டன.
இந்நடிவகடிகையின் போது டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.