அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இன்று ( ஞாயிற்க்கிழமை ) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார் .
எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பணியாளர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தினால் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் கூட தாமதமாக நடைபெறுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் GMOA வும் இணைந்து கவலை தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எனவே, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அவசர சுகாதார சேவைகளுக்கு ஒதுக்கப்படும் வகையில், மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிந்துரைக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார ஊழியர்களுக்கும் பொது போக்குவரத்து மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .