சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு வரவுள்ளது.
இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் அண்மையில் இணையவழியில் இடம்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வரவுள்ளனர்.
இந்த விஜயத்தின்போது, ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.