நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஆராச்சிக்கட்டுவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















