வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நடவடிக்கையானது நாட்டில் தற்போது மறைத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களை வெளிக்கொண்டு வருவதோடு அந்நிய செலாவணி நெருக்கடிக்கு நன்மை பயக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருளுக்கு வெளிநாட்டு நாணயத்தின் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களை ஒதுக்குவதன் மூலம் தேவையான டொலர்களை சேகரிக்க முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்திருப்பதாகக் கூறிய அவர், இந்த நடவடிக்கை அதை வெளிக் கொண்டுவர உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.