தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 155 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பக்திகா மாகாணத்தில் பெரும்பாலான இறப்புகள் நிகழ்ந்ததாக தலிபான் அரசாங்கத்தின் இயற்கை பேரிடர் அமைச்சின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி கூறியுள்ளார்.
கோஸ்டில் மேலும் 25 பேரும், நங்கர்ஹார் மாகாணத்தில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாகவும் பாதிப்பு தொடர்பாக கணக்கெடுப்பு இடம்பெறுவதாகவும் கூறினார்.
இருப்பினும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.