நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 29 சீன விமானங்களை எச்சரிக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக தாய்வான் அறிவித்துள்ளது.
செவ்வாயன்று சீனப் போர் விமானங்களின் ஊடுருவல் தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதத்தின் பிற்பகுதியிலிருந்து சீனாவின் மிகப்பெரிய வான் பாதுகாப்பு மண்டல மீறலை இந்த ஊடுருவல் குறிக்கிறது.
அதன்படி நேற்று சீனாவின் 17 போர் விமானங்கள், ஆறு H-6 குண்டுவீச்சு விமானங்களும் நீர்மூழ்கி எதிர்ப்பு, வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களும் ஊடுருவியதாக தாய்வான் அறிவித்துள்ளது.
சீன விமானங்களை எச்சரிக்க தமது போர் விமானங்களை வான்பரப்பில் பறக்கவிட்டதாகவும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஏவுகணை அமைப்புகள் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டன என்றும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.