நாட்டில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று(24) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 74 ரூபாவாலும், ஒக்டென் 95 ரக பெற்றோலின் விலை 78 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 56 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 65 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 210 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறு இருந்தாலும் நேற்றைய தினமும் மக்கள் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக கொழும்பு, மலையகம், வடக்கு, கிழக்கு என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த வரிசைகள் நீள்கின்றன.
இதன்காரணமாக பல பகுதிகளிலும் வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் அதேவேளை, சில வீதிகள் ஒருவழி பாதையாக மாற்றப்படுவதாகவும் கூறப்படுகின்றது.