40,000 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது.
இது நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த நிலையில், கப்பல் வருவதில் சுமார் ஒரு நாள் தாமதமாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.
அதுவரையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறிருப்பினும் எரிபொருள் இருப்பு குறைந்து வருவதால், பெட்ரோல் நிலையங்களில் வரிசைகள் தொடர்கின்றன.
பெட்ரோல், டீசல்இ மண்ணெண்ணெய் போன்றவற்றை பெற பொதுமக்கள் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.