இந்தியாவில் இருந்து பெற்றோல் மற்றும் டீசலை பண அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் கொண்ட நான்கு கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா தற்போது உலகச் சந்தையில் இருந்து மொத்தமாக எரிபொருளை கொள்வனவு செய்கின்றது.
குறிப்பாக, குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருளை கொள்வனவு செய்கின்றது.
இந்தநிலையிலேயே இந்தியாவின் உதவியுடன் உலகச் சந்தையில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது.
இதில் முதலாவதாக டீசல் கப்பலை இலங்கைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்பின்னர், தேவைக்கேற்ப பெற்றோல் தாங்கிகளை நாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளுக்காக இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் நிவாரணமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.