இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 321 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 109 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
கடந்த 29ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிரோஷன் டிக்வெல்ல 58 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நாதன் லியோன் 5 விக்கெட்டுகளையும் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 321 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேமரூன் கிறீன் 77 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும் அசித்த பெணார்டோ மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தனஞ்சய டி சில்வா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தற்போது இலங்கை கிரிக்கெட் அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, 109 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடரவுள்ளது.