கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (திங்கட்கிழமை) பெற்றுக்கொள்ளவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இந்த அறிக்கை இன்று அல்லது நாளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெருமளவானோர் தப்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில், சுமார் 800 கைதிகளில் 701 கைதிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 27 பேரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.