இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் 76 ஓட்டங்களுடனும் ஜோனி பேயர்ஸ்டொவ் 72 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
பர்மிங்ஹாம் மைதானத்தில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 416 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 146 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும் மெட்டி போட்ஸ் 2 விக்கெட்டுகளையும் பிரோட், ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோனி பேயர்ஸ்டொவ் 106 ஓட்டங்களையும் சேம் பிளிங்ஸ் 36 ஓட்டங்ககைளயும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சிராஜ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் தாகூர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 132 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதற்கமைய, இந்தியக் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கு 378 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, புஜாரா 66 ஓட்டங்களையும் ரிஷப்பந்த் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் பிரோட் மற்றும் மெட்டி போட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 378 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இன்னமும் ஒருநாள் மற்றும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், 119 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, போட்டியின் இறுதிநாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.