பிரித்தானிய நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதார அமைச்சா் சாஜித் ஜாவித் ஆகியோா் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
பிரதமா் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கத்தின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுவதால், அதிருப்தியில் பதவியை இராஜினாமா செய்வதாக அவா்கள் கூறியுள்ளனா்.
அண்மையில் தலைமை கொறடாவாக இருந்த கிறிஸ் பிஞ்சா் மதுபோதையில் தகராறு செய்ததாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் அவா் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பொரிஸ் ஜோன்சன் வருத்தம் தெரிவித்த நிலையில், ரிஷி சுனக்கும், சுகாதாரத் துறை அமைச்சரும் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனா்.
இதுகுறித்து ரிஷி சுனக் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்த அரசாங்கம் திறமையுடன் சரியான முறையில் செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.
ஆகவே நான் பதவி விலகுகிறேன். நான் பதவி விலகுவது கடைசியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.“ என குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, கிறிஸ் பிஞ்சருக்கு உயரிய பதவி வழங்கியதற்கு பொரிஸ் ஜோன்சன் வருத்தம் தெரிவித்தாா்.
தங்களது பதவியைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு தனது அமைச்சரவையில் இடமில்லை எனவும் அவா் கூறினாா்.