ஈரானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் உட்பட வெளிநாட்டினத்தவர்கள் சிலர், பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுத்துள்ளது.
ஈரானில் பிரித்தானிய தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவரான கில்ஸ் விட்டேக்கர் உட்பட வெளிநாட்டினத்தவர்கள் சிலர், உளவு பார்த்ததாகக் ஈரானின் புரட்சிகர காவலர்களால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஏவுகணைப் பயிற்சியின் போது தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து மண் மாதிரிகளை உளவு பார்த்ததாகவும், மண் மாதிரிகளை எடுத்ததாகவும் கூறி இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை இந்த தூதர்களை கைது செய்ததாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஈரானியப் படைகள் ஏவுகணைப் பயிற்சிகளை நடத்தும் தளத்திற்கு அருகில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், பின்னர் துணைத் தூதுவர் மன்னிப்புக் கேட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால், தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் பல்கலைக்கழகத்துடன் அறிவியல் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக நாட்டிற்குள் நுழைந்ததாக போஸ்ட் கூறியது.
இராணுவ தளங்களைத் தேடுவதற்கும் உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை அடையாளம் காணவும் தூதர்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள் என இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவரான கில்ஸ் விட்டேக்கர், தனது குடும்பத்தினருடன் ஈரானிய நகரமான கெர்மனுக்கு அருகிலுள்ள ஷாதாத் பாலைவனத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து மண் மாதிரிகளை எடுத்ததால் தடுத்து வைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.