புகையிரத சேவைகளை இன்றைய தினம்(வியாழக்கிழமை) வழமைக்கு கொண்டுவர முடியும் என புகையிரத திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதுவரை 05 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.
பல புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தால் நேற்று பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், புகையிரத ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதற்கு அமைய புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மீண்டும் சேவைகளுக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பேருந்துகள் இன்று வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்றும் தனியார் பேருந்து சேவையை உரிய முறையில் முன்னெடுக்க முடியவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.