காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பாக போராட்டத்தை வெற்றிக் கொள்ளும் இணக்கப்பாடு என்ற பெயரில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஒன்றிணைந்த பொதுமாநாட்டின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி 4 அம்சங்களுடன் போராட்டக்காரர்கள் தரப்பில் ஒருமித்த கருத்து முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இணைத்தலைவர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்