எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மெலுமொருவர் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவையைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர் பயாகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்தபோது மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது, இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அவற்றில் பல இறப்புகள் திடீர் மாரடைப்பு காரணமாக நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.