கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 1 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோக குழாய் உடைப்பு காரணமாக திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீர் விநியோகம் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.