ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரணை செய்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையிலான போர்க்குற்றங்கள் குறித்து தனக்கு அறிக்கைகள் வருவதாக அரசு வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா தெரிவித்தார்.
ஆனால், கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி படையெடுப்புக்கு பின்னர், அனைத்து போர்க்குற்ற குற்றச்சாட்டுகளையும் உக்ரைன் மறுத்துள்ளது.
பொதுமக்களைக் கொன்ற, சித்திரவதை செய்த அல்லது பாலியல் பலாத்காரம் செய்த ரஷ்ய வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என இரினா வெனெடிக்டோவா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் முழுவதும் உள்ள பகுதிகளில் தனது குழு வேலை செய்தாலும், சில நபர்கள் மற்றும் பகுதிகளுக்கு அணுகல் இல்லாததால், அனைத்து வழக்குகளையும் சரியாகவும் திறமையாகவும் விசாரிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.
மே மாதம், ஏற்கனவே 600 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், 80 வழக்குகள் தொடங்கப்பட்டதாகவும் வெனெடிக்டோவா, கூறினார்.
ரஷ்ய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட தலைநகர் கிவ்விற்கு அருகிலுள்ள புச்சா, போரோடியங்கா மற்றும் பிற நகரங்களில் பல வெகுஜன புதைகுழிகளை கண்டுபிடித்ததாக உக்ரைன் கூறுகிறது. ரஷ்யா, பொதுமக்களை குறிவைப்பதை பலமுறை மறுத்துள்ளது.